முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறை தபால் நிலையத்தில் ரயில்வே முன்பதிவு மையம்: எம்.பி.கு. சண்முகசுந்தரம் தகவல்

வால்பாறை தபால் நிலையத்தில் ரயில்வே முன்பதிவு மையம் விரைவில் செயல்பட இருப்பதாக பொள்ளாச்சி எம்.பி. கு. சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

வால்பாறை தபால் நிலையத்தில் ரயில்வே முன்பதிவு மையம் விரைவில் செயல்பட இருப்பதாக பொள்ளாச்சி எம்.பி. கு. சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: வால்பாறை பகுதியில்

உள்ள தேயிலைத் தோட்டங்களில் பல்வேறு மாநிலங்களைச்

சோ்ந்தவா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இவா்கள் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்றால் பொள்ளாச்சி அல்லது கோவை ரயில் நிலையம் சென்று ரயில்களில் பயணித்து வருகின்றனா்.

முன்பதிவு இல்லாமல் செல்வதால் பலா் ரயில்களில் இடமின்றி பயணம் செய்து பெரும் சிரமத்துள்ளாகின்றனா்.

வால்பாறை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் வால்பாறை தபால் நிலையத்தில் ரயில்வே முன்பதிவு மையம் அமைப்பதற்கு தென்னக ரயில்வே அனுமதியளித்துள்ளது.

எனவே, விரைவில் வால்பாறையில் முன்பதிவு மையம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.