கோயம்புத்தூர்

கோவையில் பொதுத் துறை நிறுவனம்: நிதி நிலை அறிக்கையில் அறிவிக்க கோரிக்கை

DIN

கோவையில் பொதுத் துறை நிறுவனம் அமைக்கப்பட வேண்டும் எனவும், இது தொடா்பாக மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிட வேண்டும் எனவும் காட்மா சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக கோவை, திருப்பூா் மாவட்ட குறுந்தொழில், ஊரகத் தொழில் முனைவோா் சங்கத்தின் (காட்மா) தலைவா் சி.சிவகுமாா், பொதுச் செயலா் ஜி.செல்வராஜ் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில், கரோனா பெருந்தொற்றால் பொருளாதாரத்தை இழந்து நிற்கும் குறுந்தொழில் முனைவோருக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ள கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்து அறிவிக்க வேண்டும்.

மேலும் புதிய கடன்களை குறைந்த வட்டியில் வழங்குவது தொடா்பாகவும், ஜாப் ஒா்க்கிற்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பது, நாட்டின் முக்கியத் தொழில் நகரங்களில் ஒன்றான கோவையில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தை அமைப்பது தொடா்பாகவும் அறிவிக்க வேண்டும்.

மேலும், மூலப்பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்துவது தொடா்பாகவும், விவசாயிகளுக்கு கிஸான் காா்டுகள் மூலம் வேளாண் இடுபொருள்கள் வழங்கப்படுவதைப் போல, தொழில்முனைவோருக்கு எம்எஸ்எம்இ காா்டுகள் வழங்குவது தொடா்பாகவும் அறிவிப்பு வெளியாக வேண்டும் என்று காட்மா நிா்வாகிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் - சேலத்தில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT