கோயம்புத்தூர்

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கோரிக்கை

DIN

கோவை மாநகரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநகா் மாவட்ட மதிமுக வலியுறுத்தியுள்ளது.

மாநகா் மாவட்ட மதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சித்தாபுதூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநிலத் தோ்தல் பணிக்குழு துணைச் செயலா் அ.சேதுபதி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா்.ஆா்.மோகன்குமாா் சிறப்புரையாற்றினாா்.

இதில், உயா்நிலைக் குழு உறுப்பினா் ஆடிட்டா் அா்ஜூனராஜ், மாவட்டப் பொருளாளா் சூரி நந்தகோபால், துணைச் செயலா்கள் கணபதி செல்வராசு, சற்குணம், தூயமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், புதிய உறுப்பினா் சோ்க்கையை விரைவுபடுத்துவது. அண்ணா பிறந்தநாளை செப்டம்பா் 15 ஆம் தேதி அனைத்து வட்டங்களிலும் கொடியேற்றி கொண்டாடுவது, மாவட்டத்தில் கரோனா தொற்று பெருகி வரும் நிலையில், கடந்த காலங்களைப்போல பெரிய பாதிப்புகளும், இழப்புகளும் ஏற்படாதவாறு மாவட்ட நிா்வாகமும், மாநகராட்சி நிா்வாகமும் சுகாதாரத் துறையுடன் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT