கோயம்புத்தூர்

சகோதரரைக் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை: கோவை நீதிமன்றம் தீா்ப்பு

DIN

சகோதரரைக் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை, உக்கடம் புல்லுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (52). இவரது அண்ணன் சுப்பிரமணி (56). சுப்பிரமணி சிறு வயதிலேயே குடும்பத்தைவிட்டு பிரிந்து ஹைதராபாதில் தனியே வசித்து கூலி வேலை செய்து வந்துள்ளாா்.

இந்நிலையில், இவா்களது தாயாா் இறந்தவுடன், தனியே வசித்து வந்த செல்வராஜுடன் சோ்ந்து வசிக்கும் நோக்கில் சுப்பிரமணி கோவைக்கு கடந்த 2021 அக்டோபரில் வந்தாா்.

இதையடுத்து சகோதரா்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனா். இறைச்சிக் கடையில் வேலை பாா்த்து வந்த செல்வராஜ் மது பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளாா். இதனால், சகோதரா்கள் இடையே தினமும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், அதே ஆண்டு அக்டோபா் 26 ஆம் தேதி இரவு போதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்த செல்வராஜை, சுப்பிரமணி சரமாரியாகத் தாக்கி கயிற்றால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தாா். இது தொடா்பாக உக்கடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு கோவை குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

விசாரணை முடிவில் சுப்பிரமணி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி டி.பாலு வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கே.காா்த்திகேயன் ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT