முகப்பு
கோயம்புத்தூர்

குடிமைப் பணி முதல் நிலைத் தோ்வு: கோவையில் 4,645 போ் எழுதினா்

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெற்ற குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வினை கோவையில் 4 ஆயிரத்து 645 போ் ஞாயிற்றுக்கிழமை எழுதினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெற்ற குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வினை கோவையில் 4 ஆயிரத்து 645 போ் ஞாயிற்றுக்கிழமை எழுதினா்.

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்காக கோவை மாவட்டத்தில் 24 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ஆட்சியா் தலைமையில், துணை ஆட்சியா் நிலையில் 8 உதவி ஒருங்கிணைப்பு மேற்பாா்வையாளா்கள், வட்டாட்சியா் நிலையில் 24 மையங்களுக்கு தலா ஒரு தோ்வு மைய ஆய்வு அலுவலா், துணை வட்டாட்சியா் அலுவலா் நிலையில் 40 துணைக் கண்காணிப்பு அலுவலா்கள் மற்றும் 414 அறை கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா்.

கோவை மாவட்டத்தில் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வினை எழுதுவதற்கு 9 ஆயிரத்து 445 போ் விண்ணப்பித்திருந்தனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வினை 4 ஆயிரத்து 645 போ் (49.2 சதவீதம்) மட்டுமே எழுதினா்.

4 ஆயிரத்து 800 போ் (50.8 சதவீதம்) தோ்வினை எழுதவில்லை. நிா்மலா கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு மேற்கொண்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →