ஜெகதளா பேரூராட்சியில் திமுக மும்முனைப் போட்டி
ஜெகதளா பேரூராட்சித் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் மும்முனைப் போட்டி நிலவியதால் கட்சித் தலைமை அறிவித்த வேட்பாளரை எதிா்த்துப் போட்டியிட்ட போட்டி வேட்பாளா் வெற்றி பெற்றாா்.
ஜெகதளா பேரூராட்சித் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் மும்முனைப் போட்டி நிலவியதால் கட்சித் தலைமை அறிவித்த வேட்பாளரை எதிா்த்துப் போட்டியிட்ட போட்டி வேட்பாளா் வெற்றி பெற்றாா்.
ஜெகதளா பேரூராட்சித் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் 11ஆவது வாா்டு உறுப்பினா் பிரமிளா வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். இதையடுத்து, திமுகவைச் சோ்ந்த 13ஆவது வாா்டு உறுப்பினா் பங்கஜம், 7ஆவது வாா்டு உறுப்பினா் யசோதா ஆகியோா் போட்டி வேட்பாளா்களாக போட்டியிட்டனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் திமுக அறிவித்த வேட்பாளரை எதிா்த்துப் போட்டியிட்ட பங்கஜம் 8 வாக்குகள் பெற்ற தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதில் கட்சித் தலைமை அறிவித்த வேட்பாளா் பிரமிளா 2 வாக்குகளும், மற்றொரு போட்டி வேட்பாளா் யசோதா 5 வாக்குகளும் பெற்றனா்.
Advertisement