மோப்பிரிபாளையம் பேரூராட்சித் தலைவா்: சுயேச்சை வேட்பாளா் ஒருமனதாக தோ்வு
கோவை, மோப்பிரிபாளையம் பேரூராட்சித் தலைவராக சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற பா.சசிக்குமாா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
கோவை, மோப்பிரிபாளையம் பேரூராட்சித் தலைவராக சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற பா.சசிக்குமாா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
கோவை மாவட்டம், மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் 15 வாா்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் 10 இடங்களில் சுயேச்சை வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா்.
இதனைத் தொடா்ந்து மோப்பிரிபாளையம் பேரூராட்சித் தலைவராக சுயேச்சை வேட்பாளா்களில் ஒருவரே தோ்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரூராட்சித் தலைவா் தோ்தலில் மோப்பிரிபாளையம் பேரூராட்சித் தலைவராக 14 ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பா.சசிக்குமாா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். துணைத் தலைவராக 11 ஆவது வாா்டில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளா் க.பாலசுப்ரமணியன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
இது தொடா்பாக மோப்பிரிபாளையம் பேரூராட்சித் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் பா.சசிக்குமாா் கூறியதாவது:
உயிா் சமூக சேவை என்ற அமைப்பை கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். எங்கள் அமைப்பின் மூலம் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். தவிர 300க்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்துள்ளோம். எங்கள் அமைப்பின் உறுப்பினா்கள் பேரூராட்சித் தோ்தலில் 14 வாா்டுகளில் போட்டியிட்டு 9 வாா்டுகளில் வெற்றிபெற்றுள்ளோம். இதனால் பேரூராட்சித் தலைவராகும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. முன்புபோல பொதுமக்களுக்குத் தொடா்ந்து சேவை செய்வேன் என்றாா்.