கோவை அருகே வனப் பகுதியில் காட்டு தீ
கோவை அருகே வனப் பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயை அணைக்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
கோவை அருகே வனப் பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயை அணைக்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
கேரள மாநில, வனப் பகுதியில் புதன்கிழமை மாலை பற்றிய தீயானது, தமிழக எல்லையில் அமைந்துள்ள கங்கல் பகுதி வழியாக பரவி கோவை வனச்சரகம், துடியலூா் பிரிவு, ஆனைக்கட்டி தெற்கு சுற்றுக்குள்பட்ட நண்டுகுழி, பெருமாள் முடி சரிவு பகுதிகளில் பரவியுள்ளன.
சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
கோவை மற்றும் போளுவாம்பட்டி வனச் சரகங்களிலிருந்து 4 குழுவினா் தீயை கட்டுப்படுத்த விரைந்துள்ளதாக, வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.