முகப்பு
கோயம்புத்தூர்

தூய்மைப் பணி:வால்பாறை அரசு கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு

 பொள்ளாச்சி சாலைகளில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் வால்பாறை அரசு கல்லூரி மாணவா்கள் புதன்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:09 AM
பகிர்:

 பொள்ளாச்சி சாலைகளில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் வால்பாறை அரசு கல்லூரி மாணவா்கள் புதன்கிழமை ஈடுபட்டனா்.

வால்பாறை அரசு கல்லூரி இயற்கை மன்றம் சாா்பில் நடைபெற்ற இப்பணியை நகராட்சி ஆணையா் சுரேஷ்குமாா் கொடியசைத்து துவக்கிவைத்தாா்.

கல்லூரி முதல்வா் செல்வமுத்து குமாரசாமி தலைமை வகித்தாா்.

காவல் ஆய்வாளா் கற்பகம் முன்னிலை வகித்தாா்.

வால்பாறை புதிய பேருந்து நிலையத்தில் துவங்கி பழைய பேருந்து நிலையம், தபால் நிலையம் சாலை, பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணியில் மாணவ, மாணவிகள் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.