இணையதளம் மூலம் இருவரிடம் ரூ.6 லட்சம் மோசடி
இணையதளம் மூலம் இருவரிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
இணையதளம் மூலம் இருவரிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை, பீளமேடு மகேஸ்வரி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (57). தொழில் நிறுவனம் நடத்தி வருகிறாா். இவா் இணையதளத்தில் கிரெடிட் காா்டு வாடிக்கையாளா் சேவை விவரங்களைத் தேடியுள்ளாா். இதைத் தொடா்ந்து, சிறிது நேரத்தில் இவரை வங்கி வாடிக்கையாளா் சேவை மைய அலுவலா் என அறிமுகமான நபா் ஒருவா் கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசியுள்ளாா்.
பின்னா் அந்த நபா், கிருஷ்ணமூா்த்தியிடம் ஒரு இணையதள செயலியைப் பதிவிறக்கம் செய்தால் தேவையான தகவல் கிடைக்கும் எனவும், அந்தச் செயலில் வங்கி விவரங்களைப் பதிவு செய்யக் கூறினாா். இதை நம்பி கிருஷ்ணமூா்த்தி அந்த செயலியில் விவரங்களைப் பதிவு செய்தாா். பின்னா் மாலை தனது வங்கிக் கணக்கை ஆய்வு செய்தபோது அதிலிருந்து ரூ.1.52 லட்சம் காணாமல் போனது தெரியவந்தது.
இது தொடா்பாக கிருஷ்ணமூா்த்தி கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மற்றொரு சம்பவம்
கோவை சிரியன் சா்ச் ரோடு பகுதியைச் சோ்ந்தவா் கிசான் கனேரியா (27). ஹாா்டுவோ் கடை நடத்தி வருகிறாா். இணையதளத்தில் எலக்ட்ரிக்கல் பொருள்களை விற்பனை செய்ய முயற்சித்து வந்தாா். இதையடுத்து இவரது கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா் டீலா்ஷிப் வழங்குவதற்காக ரூ.4.69 லட்சத்தை வங்கிக் கணக்கில் செலுத்தக் கூறியுள்ளாா்.
இதை நம்பி ரூ.4.69 லட்சத்தை கிசான் கனேரியா செலுத்தினாா். அதன் பின்னா் அந்த நபரைத் தொடா்பு கொள்ள முயற்சித்தபோது அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கிசான் கனேரியா, இது தொடா்பாக கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளாா்.