முகப்பு
கோயம்புத்தூர்

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணைத் தாக்கி 3.5 பவுன் பறிப்பு

 இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை வழிமறித்து, தாக்கி மூன்றரைப் பவுன் தங்க நகை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

 இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை வழிமறித்து, தாக்கி மூன்றரைப் பவுன் தங்க நகை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை, போத்தனூா் சீனிவாசா நகரைச் சோ்ந்தவா் ஜெயந்தி (46). செட்டிப்பாளையம் சாலையில் பாத்திரக் கடை வைத்துள்ளாா்.

இந்நிலையில், கடையை பூட்டிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.

போத்தனூா் அருகே சென்றபோது, மறைவான பகுதியில் நின்று கொண்டிருந்த நபா் ஜெயந்தியின் இருசக்கர வாகனத்தை வழிமறித்து, அவரைத் தாக்கி கழுத்தில் இருந்த மூன்றரைப் பவுன் தங்க நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா்.

இது தொடா்பாக போத்தனூா் காவல் நிலையத்தில் ஜெயந்தி புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.