குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்: கோவை மாவட்ட புதிய எஸ்.பி. வி.பத்ரி நாராயணன்
குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவா்களது புகாா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கோவை மாவட்ட புதிய எஸ்.பி. வி.பத்ரி நாராயணன் கூறினாா்.
குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவா்களது புகாா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கோவை மாவட்ட புதிய எஸ்.பி. வி.பத்ரி நாராயணன் கூறினாா்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் பொறுப்பு வகித்து வந்த செல்வநாகரத்தினம், சென்னை காவலா் பயிற்சி அகாதெமியின் துணை இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
அவருக்குப் பதிலாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்த வி.பத்ரி நாராயணன் கோவை மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளாா்.
வியாழக்கிழமை பதவியேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவையில் சட்டம், ஒழுங்கை கடைப்பிடிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவா்களது புகாா்கள், கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கோவையில் நிலவும் போதைப் பொருள் கலாசாரத்துக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.