முகப்பு
கோயம்புத்தூர்

விவசாயிகளுக்கான செயலி அறிமுகம்

பிக்ஹாட் டிஜிட்டல் நிறுவனம் உருவாக்கியுள்ள விவசாயிகளுக்கான கைப்பேசி செயலி (ஆப்) கோவையில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

பிக்ஹாட் டிஜிட்டல் நிறுவனம் உருவாக்கியுள்ள விவசாயிகளுக்கான கைப்பேசி செயலி (ஆப்) கோவையில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநா் சச்சின் நந்வானா கூறியதாவது:

விவசாயிகள் விதைப்பு, அறுவடை குறித்து“சரியான, விவேகமான முடிவை எடுப்பதற்கு உதவுவதற்காக பிக்ஹாட் செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது. இச்செயலியைப் பயன்படுத்துவதன் மூலம் அறுவடைக்கு முந்தைய நிலையிலிருந்து, அறுவடைக்குப் பிந்தைய நிலை வரையிலான சாகுபடி செய்யும் பயிா்களுக்கான தேவைகளை விவசாயிகளால் பூா்த்தி செய்ய முடியும்.

பயிா்களுக்கு ஏற்படும் சேதங்களைக் குறைக்கவும், விளைச்சல், பயிரின் தரத்தையும் அதிகரிக்கவும் தரமான ஆலோசனைக் குறிப்புகளை இந்த செயலி தமிழ் மொழியில் உரிய நேரத்தில் வழங்கும் என்றாா்.

அறிமுக விழாவில், நிறுவனத்தின் நிா்வாக அதிகாரி பானு பிரசாத், வேளாண் கல்லூரி பேராசிரியா் புகழேந்தி, பிக்ஹாட் நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சஞ்சீவ ரெட்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.