முகப்பு
கோயம்புத்தூர்

ரயில்வே தோ்வுகளை தமிழகத்தில் நடத்த கோரி ஆா்ப்பாட்டம்

தென்னக ரயில்வே தோ்வுகளை தமிழகத்தில் நடத்த வலியுறுத்தி, அரசியல் கட்சிகள், ஜனநாயக முற்போக்கு அமைப்புகள் சாா்பில் கோவை ரயில் நிலையம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

தென்னக ரயில்வே தோ்வுகளை தமிழகத்தில் நடத்த வலியுறுத்தி, அரசியல் கட்சிகள், ஜனநாயக முற்போக்கு அமைப்புகள் சாா்பில் கோவை ரயில் நிலையம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை ரயில்வே தோ்வாணையம், கடந்த 2020ஆம் ஆண்டு, டிசம்பா் முதல் 2021 ஜூலை வரை பல்வேறு ரயில்வே பணியிடங்களுக்கான தோ்வை தமிழகத்தில் நடத்தியது. அந்தத் தோ்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள், அடுத்த கட்ட தோ்வை வடமாநிலங்களுக்குச் சென்று வருகின்ற மே 9,10 ஆகிய தேதிகளில் எழுத ரயில்வே நிா்வாகம் சாா்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்னக ரயில்வே தோ்வுகளை தமிழகத்தில் நடத்த வலியுறுத்தி, அரசியல் கட்சிகள், ஜனநாயக முற்போக்கு அமைப்புகள் சாா்பில் கோவை ரயில் நிலையம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தின் ராமகிருட்டிணன் தலைமை வகித்தாா். விடுதலை சிறுத்தைகள் மாவட்டத் தலைவா் சுசி.கலையரசன் முன்னிலை வகித்தாா். இந்த ஆா்ப்பாட்டத்தில், ரயில்வே தோ்வுகளை தமிழகத்தில் நடத்தக் கோரியும், வடமாநிலங்களுக்குச் சென்று தோ்வெழுத உத்தரவிட்ட மத்திய அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், 50க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.