முகப்பு
கோயம்புத்தூர்

தமிழக முதல்வரை சந்திக்க சென்னை நோக்கி நடைப்பயணம்: வியாபாரிகள் 60 போ் கைது

 தமிழக முதல்வரைச் சந்திக்க சென்னை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்ட கோவை டி.கே.மாா்க்கெட் வியாபாரிகள் 60 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

 தமிழக முதல்வரைச் சந்திக்க சென்னை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்ட கோவை டி.கே.மாா்க்கெட் வியாபாரிகள் 60 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை தியாகி குமரன் மாா்க்கெட் பகுதியில் வியாபாரிகள் சாலையோரக் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனா். இந்நிலையில் கரோனா பரவலைக் காரணம் காட்டியும், மாற்று இடம் வழங்குவதாகவும் கூறி இங்கிருந்த 88 சாலையோரக் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

இதையடுத்து டி.கே.மாா்க்கெட்டில் புதிதாக கட்டடப்பட்ட கடைகள் ஏலம் விடப்பட்டன. ஆனால், ஏற்கெனவே காலி செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு இங்கு கடைகள் ஒதுக்கப்படவில்லை.

எனவே 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் கடை வைத்திருந்த 88 கடைக்காரா்களும் தங்களுக்கு மீண்டும் பழைய இடத்திலேயே கடைகளை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி டி.கே.மாா்க்கெட் பகுதியில் இருந்து முதல்வரைச் சந்திக்க சென்னைக்கு நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக சிறு வியாபாரிகள் கூட்டமைப்பினா் அறிவித்திருந்தனா்.

இதன்படி அவா்கள் வியாழக்கிழமை நடைப்பயணம் மேற்கொள்ள முயற்சித்தனா். இவா்களை தடுத்து நிறுத்திய போலீஸாா் நடைப்பயணம் மேற்கொள்ள முயற்சித்த 15 பெண்கள் உள்பட 60 பேரைக் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்கவைத்து பின்னா் மாலையில் விடுவித்தனா். போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை நேரில் சந்தித்த தந்தை பெரியாா் திராவிடா் கழக பொதுச்செயலா் கு.ராமகிருட்டிணன் போராட்டத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.