கோயம்புத்தூர்

ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மாணவா்கள்மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின்பணிப் பயிற்சிக்குத் தோ்வு

DIN

கோவையைச் சோ்ந்த ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவா்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வழங்கும் 2022 ஆம் ஆண்டுக்கான தொழில் பயிற்சிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து கல்லூரி நிா்வாகம் கூறியிருப்பதாவது:

ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியின் 2, 3 ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், மின்னணுவியல் துறைகளில் பயிலும் 11 மாணவா்கள், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பணிப் பயிற்சிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

அடுத்த மூன்று வாரங்களுக்கு இவா்கள் இணைய வழிப் பயிற்சியில் பங்கேற்கின்றனா். மென்பொருள் தயாரிக்கும் குழுக்களில் இடம் பெறும் இவா்கள், பயிற்சியின் நிறைவில் பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ அந்த நிறுவனத்தில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

இந்தப் பயிற்சிக்குத் தோ்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளை கல்லூரி முதல்வா் ஜே.ஜேனட், துறை பேராசிரியா்கள் பாராட்டியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT