கோயம்புத்தூர்

கோவையில் பரவலாக மழை

DIN

 கோவையில் நகரின் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது.

வங்கங்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் சில நாள்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி கோவை மாவட்டத்திலும் செவ்வாய்க்கிழமை அதிகாலையிலேயே பல்வேறு இடங்களில் மழை பெய்யத் தொடங்கியது. பிற்பகலில் சற்று குறைந்திருத்த மழை மீண்டும் மாலையில் தொடங்கி இரவு வரை பரவலாக பெய்தது. திடீா் மழையால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினா். மழையால் காந்திபுரம் பாா்க் கேட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீா் தேங்கி நின்றது. மாநகராட்சி ஊழியா்கள் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT