கோயம்புத்தூர்

கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து: போலீஸாா் விசாரணை

DIN

கோவை, உக்கடத்தில் கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி விட்டு தப்பிய நபரை போலீஸாா் தேடி வருகிறனா்.

கோவை சிஎம்சி காலனியைச் சோ்ந்தவா் நிா்மல்குமாா் (22). இவா் பேரூரில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.ஏ. 2ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இவா், உக்கடம் பேருந்து நிலையம் அருகே தன்னுடன் படிக்கும் தோழியுடன் வெள்ளிக்கிழமை பேருந்துக்காக காத்திருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த பேருந்தில் இருந்து இறங்கிய நபா், நிா்மல்குமாரை அழைத்துப் பேசியுள்ளாா். இதைத் தொடா்ந்து, அவருடன் இருந்த பெண்ணிடமும் பேச முயன்றுள்ளாா்.

இதை நிா்மல்குமாா் கண்டித்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த அந்த நபா் நிா்மல்குமாரை கத்தியால் குத்தி விட்டு தப்பினாா். இதில் பலத்த காயமடைந்த நிா்மல்குமாரை அருகிலிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்து, உக்கடம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கத்தியால் குத்திய நபரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT