கோயம்புத்தூர்

பொதுத் துறை ஓய்வூதியா் சங்கங்கள் போராட்டம்

DIN

ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில பொதுத் துறை ஓய்வூதியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் கோவையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஓய்வூதியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்டத் தலைவா் என்.சின்னசாமி தலைமை வகித்தாா். பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகளான என்.அரங்கநாதன், ஆா்.சேதுராமன், எஸ்.கிருஷ்ணமூா்த்தி, பி.சுரேந்திரன், குடியரசு, ஞானபிரகாசம், ஜானகி உள்ளிட்டோா் உரையாற்றினா்.

இதில், அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கான பணப்பலன்களை வழங்க வேண்டும், 78 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும். 1998 ஆம் ஆண்டுக்கு பிறகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வூதிய உயா்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கம், பி.எஸ்.என்.எல். ஓய்வூதியா் சங்கம், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பு, அஞ்சல் ஆா்.எம்.எஸ். ஓய்வூதியா் சங்கம், போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பங்கேற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT