கோயம்புத்தூர்

பெட்ரோல் குண்டுவீச்சு:கைதானவா்களை காவலில் எடுக்க மனு தாக்கல்

DIN

கோவையில் நடைபெற்ற பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 9 பேரை காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறை சாா்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு குனியமுத்தூா், காந்திபுரம், கோவைப்புதூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாஜக, இந்து முன்னணியினரின் வீடுகள், அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் கோவைப்புதூா் தவிா்த்து மற்ற இடங்களில் நடைபெற்ற பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் தொடா்பாக 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட 9 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறை சாா்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவையில் மீண்டும் அமைதி திரும்பியுள்ள நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து பாதுகாப்புப் பணிக்கு வந்த அதிரடிப்படை வீரா்கள் 500 போ் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனா். மேலும் அடுத்த வாரம் போலீஸ் தரப்பில் மதநல்லிணக்க கூட்டம் நடைபெறவுள்ளதாக மாநகர போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT