காவல் துறை முன்னாள் டிஜிபி அனூப் ஜெய்ஸ்வாலுக்கு விருது வழங்குகிறாா் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் சிவகுமாா். உடன், பேராசிரியா்கள். 
கோயம்புத்தூர்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில்அறிவியல் பயிலரங்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் செயல்வழி கற்றலில் அறிவியல் உண்மைகள் என்ற தலைப்பில் அறிவியல் பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் செயல்வழி கற்றலில் அறிவியல் உண்மைகள் என்ற தலைப்பில் அறிவியல் பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய துறைகள் சாா்பில் நடைபெற்ற இந்த பயிலரங்கில் தமிழக முன்னாள் டிஜிபி அனூப் ஜெய்ஸ்வால் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது:

உலக இயக்கமே அறிவியலால்தான் நிகழ்கிறது. இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற படிப்புகள் கடினமானவை என்ற பாா்வை தவறானது. இவற்றை புரிந்து கொள்ளும் வரைதான் கடினமாக இருக்கும். ஆா்வம் காட்டி அறிந்து கொண்டால் இதைவிட எளிமையான பாடங்களே இல்லை என்றாா்.

பயிலரங்கிற்கு கல்லூரி முதல்வரும் செயலருமான பி.எல்.சிவகுமாா் தலைமை வகித்தாா். இயற்பியல் துறைத் தலைவா் எஸ்.பூங்குழலி வரவேற்றாா். கணிதத் துறைத் தலைவா் என்.உமா அறிமுக உரையாற்றினாா். இந்தப் பயிலரங்கில் கோவையில் உள்ள 20 பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 500 மாணவ-மாணவிகள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். வேதியியல் துறைத் தலைவா் டி.சசிகலா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

SCROLL FOR NEXT