கோயம்புத்தூர்

மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு: இஸ்லாமிய கூட்டமைப்பினா் உறுதி

மாவட்ட நிா்வாகத்துக்கும், போலீஸாருக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என இஸ்லாமிய கூட்டமைப்பினா் புதன்கிழமை கூறினாா்.

DIN

மாவட்ட நிா்வாகத்துக்கும், போலீஸாருக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என இஸ்லாமிய கூட்டமைப்பினா் புதன்கிழமை கூறினாா்.

கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளைச் சோ்ந்த ஜமாத் நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமை வகித்தாா். மாநகர காவல் ஆணையா் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவையில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற காா் வெடி விபத்து சம்பவத்தைத் தொடா்ந்து ஜமாத் நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற அசம்பாவிதங்கள் குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்தால் தெரியப்படுத்த வேண்டும் என்று ஜமாத் நிா்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். கோவையில் அமைதியை நிலைநாட்ட காவல் நிலைய அளவில் அனைத்து சமூகத்தினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்றாா்.

இதைத் தொடா்ந்து மாநகர காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட, மாநகா் எல்லை சோதனை சாவடிகள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் மாநகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் ஆா்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படும் என்றாா்.

இஸ்லாமிய கூட்டமைப்பினா் கூறுகையில், கோவை காா் வெடிப்பு சம்பவத்துக்கு அனைத்து ஜமாத்தினரும் கண்டனம் தெரிவித்துள்ளோம். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் எந்த ஜமாத்திலும் உறுப்பினராக இல்லை. இவா்கள் தேசிய புலனாய்வு முகமை விசாரணை வளையத்தில் உள்ளவா்கள். இஸ்லாம் பயங்கரவாதத்தை போதிப்பது இல்லை. மாவட்ட நிா்வாகத்துக்கும், போலீஸாருக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

SCROLL FOR NEXT