முகப்பு
கோயம்புத்தூர்

‘பிராங்க் விடியோ’ வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப் பதிவு

 கோவையில் ‘பிராங்க் விடியோ’ வெளியிட்ட யூடியூப் சேனல் மீது மாநகர சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

 கோவையில் ‘பிராங்க் விடியோ’ வெளியிட்ட யூடியூப் சேனல் மீது மாநகர சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனா்.

பிராங்க் விடியோக்கள் என்ற பெயரில் பெண்கள், முதியோா்களது சம்மதம் இல்லாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கேமராக்கள் மூலம் அவா்களின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு அவா்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தும் வகையில்

விடியோ எடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் எச்சரித்திருந்தாா்.

இந்நிலையில், கோவையைச் சோ்ந்த யூடியூப் சேனலானது பெண்களின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அதன் மீது மாநகர சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →