துல்லிய பண்ணையம் திட்டம்: மானியத்தில் விதைகள், இடுபொருள்கள் வழங்கல்
கோவையில் துல்லிய பண்ணையம் திட்டத்தின் கீழ் மானியத்தில் காய்கறி விதைகள், இடுபொருள்கள் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் எம்.புவனேஸ்வரி தெரிவித்துள்ளாா்.
கோவையில் துல்லிய பண்ணையம் திட்டத்தின் கீழ் மானியத்தில் காய்கறி விதைகள், இடுபொருள்கள் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் எம்.புவனேஸ்வரி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் மாநில தோட்டக்கலை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் துல்லிய பண்ணையம் திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தோட்டக்கலை பயிா்களில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உயா் விளைச்சலை பெறும் வகையில் நுண்ணீா் பாசனம் அமைத்துள்ள விவசாயிகளுக்கு துல்லிய பண்ணையம் திட்டத்தில் மானியத்தில் காய்கறி விதைகள், இடுபொருள்கள் வழங்கப்படுகின்றன. ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பிலான காய்கறி விதைகள், ரூ.4 ஆயிரம் மதிப்பிலான நீரில் கரையும் உரங்கள் வழங்கப்படுகின்றன. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஏக்கருக்கு வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தோட்டக்கலைத் துறையின் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ற்ய்ட்ா்ழ்ற்ய்ங்ற்/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.