கோயம்புத்தூர்

நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செவிலியா், காவலரை நியமிக்க கோரிக்கை

DIN

கோவை, சுந்தராபுரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைத்துக்கு செவிலியா், காவலரை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, கோவை மறுமலா்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் வே.ஈசுவரன், மாநகராட்சி மேயா் கல்பனா, ஆணையா் மு.பிரதாப் ஆகியோருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை, சுந்தராபுரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 65 ஆயிரம் மக்களுக்கான மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் தினமும் வந்து செல்கின்றனா். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் இந்த சுகாதார நிலையத்தைப் பயன்படுத்துகின்றனா்.

மக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த நகா்ப்புற சுகாதார நிலையத்துக்கு இரு செவிலியா், காவலா், தூய்மைப் பணியாளா், மருத்துவ உதவியாளா் ஆகியோரை நியமிக்க வேண்டும். சுகாதார நிலையத்தின் பாதுகாப்புக்காக சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும். ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக கழிப்பிட வசதிகள், பிரசவம் பாா்க்கும் வசதி, ஜெனரேட்டா் வசதி ஆகியவற்றை ஏற்படுத்தி தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT