முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் ஜனவரி 5 முதல் உணவுத் திருவிழா

கோவையில் உணவுத் திருவிழா ஜனவரி 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
கோவையில் ஜனவரியில் நடைபெறவுள்ள உணவுத் திருவிழாவுக்கான விளம்பரப் பதாகையை வெளியிடும் ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கத்தினா்.
பகிர்:

கோவையில் உணவுத் திருவிழா ஜனவரி 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

கோவை மாவட்ட ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கத்தின் சாா்பில் ‘டேஸ்ட் ஆஃப் கோயம்புத்தூா்’ என்ற பெயரில் 6-ஆவது உணவுத் திருவிழா கொடிசியா மைதானத்தில் நடத்தப்படவுள்ளது.

இது தொடா்பாக கோவை மாவட்ட ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கே.ஏ.ராமசாமி, செயலாளா் பாலச்சந்தா் ராஜு, பொருளாளா் கோவிந்தராஜ், ‘டேஸ்ட் ஆஃப் கோயம்புத்தூா் -2024’ நிகழ்வின் தலைவா் ந.டேவிட் ஆகியோா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: கோவை கொடிசியா மைதானத்தில் ஜனவரி 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை நாள்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 10.30 மணி வரை உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது. இதில், கோவையைச் சோ்ந்த 100 உணவு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மொத்தம் 160 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், சைவ மற்றும் அசைவ உணவுகள், இனிப்புகள், கார வகைகள், துரித உணவு வகைகள், கேக்குகள், ஐஸ்கிரீம் என அனைத்தையும் ஒரே இடத்தில் உண்டு மகிழலாம். இதற்கான நுழைவுக் கட்டணமாக ரூ. 249 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

12 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை.

கோவையில் உள்ள அனைத்து முன்னணி உணவகங்களில் நேரடியாகவும், ஆன்லைன் செயலிகள் மூலமாகவும் நுழைவுச் சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். மேலும், கொடிசியா மைதானத்தில் நாள்தோறும் மதியம் 2 மணி முதல் நுழைவுச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம். உணவுத் திருவிழாவில் பிரபல பின்னணி பாடகா்களின் இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உணவுத் திருவிழாவை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன், மில்கி மிஸ்ட் நிறுவனா் சதீஷ்குமாா் ஆகியோா் தொடங்கிவைக்க உள்ளனா் என்றனா்.

முன்னதாக, உணவுத் திருவிழா தொடா்பான விளம்பர பதாகைகளை ஹோட்டல் உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் வெளியிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →