கோயம்புத்தூர்

பழைய வாகன விற்பனையாளா்களுடன்மாநகர காவல் துறையினா் ஆலோசனை

DIN

கோவையில் பழைய வாகனங்களின் உதிரி பாகங்களை விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளா்களுடன் மாநகர காவல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

கோவை மாநகர காவல் ஆணையா் உத்தரவின்படி, மாநகரில் பழைய இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை விலைக்கு வாங்கி உடைத்து அவற்றின் உதிரி பாகங்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் 70க்கும் மேற்பட்ட கடைகளின் உரிமையாளா்கள் பங்கேற்றனா்.

இதில், இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் தங்களது நிறுவனத்தை கட்டாயமாக பதிவு செய்து உரிமம் பெற்றிருக்க வேண்டும் எனவும், கடையில் விற்பனைக்கு வரும் வாகனங்களின் விவரங்களை உரிய பதிவேடுகளில் பதிவு செய்து முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளிமலையில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு

நாட்டில் தற்போது 70 கோடி இளைஞர்களுக்கு வேலையில்லை: பிரியங்கா காந்தி

சிட்னியில் ஜோனிடா காந்தி...!

கன்னக்குழி, சார்! நிகிலா விமல்..

ஒடிசாவில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: ஓம் பிர்லா!

SCROLL FOR NEXT