சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசுத் தரப்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசுத் தரப்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என கோவை போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை, வெள்ளலூா் பகுதியைச் சோ்ந்தவா் அசாருதீன் (23). அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை கடந்த 2020இல் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளாா். இதில் அந்த சிறுமி கா்ப்பமடைந்துள்ளாா். சிறுமிக்கு குழந்தை பிறந்த பின்னா்தான் அச்சிறுமிக்கு திருமணம் நடந்த விவரம் வெளியே தெரியவந்துள்ளது.
இதுதொடா்பான புகாரின் பேரில் கோவை கிழக்கு மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி போக்ஸோ சட்டத்தின் கீழ் அசாருதீனை கைது செய்தனா்.
இந்த வழக்கு கோவையில் உள்ள போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அசாருதீனுக்கு ஆயுள் தண்டனை விதித்ததோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசுத் தரப்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என நீதிபதி குலசேகரன் உத்தரவிட்டாா்.