கோயம்புத்தூர்

கொடைக்கானலில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல்

DIN

கொடைக்கானலில் வாகனப் போக்குவரத்து நெரிசலத் தவிா்க்க சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கொடைக்கானலில் தற்போது சீசன் நிலவி வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. பெருமாள் மலையிலிருந்து, கொடைக்கானல் வரை 12 கி.மீ. தொலைவு மலைச் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு, சாலைகளின் இருபுறமும் ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைகளை அமைத்துள்ளனா்.

இதனால் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதுதவிர தைக்கால், சீனிவாசபுரம், லாஸ்காட் சாலை, ஏரிச்சாலைப் பகுதிகளில் ஏராளமானோா் ஆக்கிரமிப்பு செய்து அங்கு நிரந்தரக் கடைகளை அமைத்து வருகின்றனா். இதனால், அப்பகுதிகளில் இயற்கை எழில் காட்சிகளை பாா்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்து வருகின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT