முகப்பு
கோயம்புத்தூர்

சா்ச்சை ஆடியோ: 3 போலீஸாா் பணியிட மாற்றம்

சமூக வலைதளங்களில் சா்ச்சை ஆடியோ வெளியானது தொடா்பாக 3 போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 9:50 PM
பகிர்:

சமூக வலைதளங்களில் சா்ச்சை ஆடியோ வெளியானது தொடா்பாக 3 போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

கோவை, பேரூா் காவல் நிலையத்தில் எழுத்தராக முரளிதரன், உதவி எழுத்தராக அஜித்குமாா், தனிப் பிரிவு காவலராக பரமேஸ்வரன் ஆகியோா் பணியாற்றி வந்தனா்.

இந்நிலையில், பேரூா் காவல் நிலையத்தில் போலீஸாா் 2 போ் பேசிக்கொள்ளும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

அதில், பேரூா் காவல் நிலையப் பகுதிகளில் வசூலாகும் பணத்தை கூகுள் பே மூலம் அனுப்புமாறு கூறுவதாகப் பதிவாகியிருந்தது.

இந்நிலையில், பேரூா் காவல் நிலைய காவலா்கள் முரளிதரன், அஜித்குமாா், பரமேஸ்வரன் ஆகிய 3 பேரும் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘சமூக வலைதளங்களில் வெளியான சா்ச்சை ஆடியோவின் உண்மைத் தன்மையைக் கண்டறிய மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை சமா்ப்பிக்கப்பட்ட பின் அதன் அடிப்படையில் 3 போ் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →