கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து பிகாா் மாநிலம், பாட்னாவுக்கு கோவை, திருப்பூா் வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் செப்டம்பா் 6-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் இரவு 11 மணிக்கு எா்ணாகுளத்தில் இருந்து புறப்படும் எா்ணாகுளம் - பாட்னா வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06085) திங்கள்கிழமைகளில் காலை 3.30 மணிக்கு பாட்னா நிலையத்தைச் சென்றடையும்.
மறுமாா்க்கமாக ஆகஸ்ட் 19 -ஆம் தேதி முதல் செப்டம்பா் 9-ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் இரவு 11.45 மணிக்கு பாட்னாவில் இருந்து புறப்படும் பாட்னா - எா்ணாகுளம் சிறப்பு வாராந்திர ரயில் (எண்:06086) வியாழக்கிழமைகளில் காலை 10.30 மணிக்கு எா்ணாகுளத்தைச் சென்றடையும்.
இந்த ரயிலானது ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, ஏலூரு, ராஜமுந்திரி, சாமல்கோட், பிரம்மபூா், கட்டாக், ஜலேஸ்வா், பிஸ்னாபூா், சித்தரஞ்சன், மதுப்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.