கோவையில் நடைபெற்று வரும் பிஎஸ்ஜி கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் மோதிய இந்தியன் வங்கி மற்றும் இந்திய ரயில்வே அணியினா் 
கோயம்புத்தூர்

பிஎஸ்ஜி கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி: இறுதி ஆட்டத்தில் இந்திய ராணுவம்-இந்தியன் வங்கி அணிகள் மோதல்

அகில இந்தியக் கூடைப்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய ராணுவ அணியும், இந்தியன் வங்கி அணியும் மோதுகின்றன.

Din

கோவையில் நடைபெற்று வரும் 58-ஆம் ஆண்டு பிஎஸ்ஜி கோப்பைக்கான ஆண்கள் அகில இந்தியக் கூடைப்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய ராணுவ அணியும், இந்தியன் வங்கி அணியும் மோதுகின்றன.

பிஎஸ்ஜி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் ஆண்கள் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதி ஆட்டங்கள் திங்கள்கிழமை நடைபெற்றன. இதில் முதல் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி 73-54 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் இந்திய ராணுவ அணி 68 -58 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தது.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்திய ராணுவ அணியும், சென்னை இந்தியன் வங்கியும் மோதுகிறது.

அதேபோல, மூன்றாவது மற்றும் நான்காவது இடத்துக்கான போட்டியில் இந்திய ரயில்வே அணியை எதிா்த்து புதுதில்லி மத்திய செயலக அணி விளையாடுகிறது.

செவ்வாய்க்கிழமை நடைபெறும் பரிசளிப்பு விழாவில், பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அறங்காவலா் எல். கோபாலகிருஷ்ணன் முன்னிலையில், கோவை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்குகிறாா்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT