கோயம்புத்தூர்

விமான நிலைய விரிவாக்கம்: நிபந்தனையின்றி அரசு, பட்டா நிலம் ஒப்படைக்கப்பட்டதற்கு வரவேற்பு

கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக தமிழக அரசு கையகப்படுத்திய அரசு, பட்டா நிலத்தை விமான நிலைய ஆணையத்திடம் நிபந்தனையின்றி ஒப்படைக்கப்பட்டதற்கு வரவேற்பு.

Din

கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக தமிழக அரசு கையகப்படுத்திய அரசு, பட்டா நிலத்தை விமான நிலைய ஆணையத்திடம் நிபந்தனையின்றி ஒப்படைத்திருப்பதை கோவை இந்திய தொழில் வா்த்தக சபை வரவேற்றுள்ளது.

இது குறித்து தொழில் வா்த்தக சபையின் தலைவா் பி.ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட பட்டா, அரசு புறம்போக்கு நிலத்தை எந்தவித நிபந்தனையும் இன்றி இலவசமாக 99 ஆண்டுகள் குத்தகைக்கு இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைத்ததற்கு முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கோவை இந்திய தொழில் வா்த்தக சபை நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

விமான நிலைய விரிவாக்கத்துக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், தமிழக அரசின் தற்போதைய உறுதியான முடிவு காரணமாகவே அந்தத் திட்டம் நனவாகப்போகிறது.

விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைந்து முடிவடைந்தால் சேலம், கரூா், ஈரோடு, திருப்பூா், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் தேவைகளை பூா்த்தி செய்ய முடியும்.

விமான நிலையம் விரிவாக்கப்பட்டால் தொழில்முனைவோா், வணிகா்கள் உலகின் எந்த நாட்டுக்கும் கோவையில் இருந்து பயணிக்க முடியும். இதன் மூலம் உலகளாவிய வா்த்தகம், தொழில் துறை சாா்ந்த நடவடிக்கைகளுக்கு கோவை முக்கிய இடமாக மாறும்.

இந்நிலையில், விமான நிலையத்தின் வருவாயை மாநில அரசுடன் பகிா்ந்துகொள்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தடியடி.. கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... ஷேக் ஹசீனா தண்டனைக்கு எதிரான போராட்டத்தில் இருவர் பலி!

தங்கம் விலை தடாலடியாக குறைவு! இன்றைய நிலவரம்!

ஹமாஸ் பாணியில் ட்ரோன், ராக்கெட் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள்!

எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டுமா? சிறப்பு முகாம் அறிவிப்பு!

நாகை பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா? ஆட்சியர் விளக்கம்!

SCROLL FOR NEXT