கோயம்புத்தூர்

கல்விக் கடன் முகாமையொட்டி கல்லூரிகளில் இ-சேவை மையங்கள்

கோவை மாவட்டத்தில் நடைபெற உள்ள கல்விக் கடன் முகாமையொட்டி கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 22, 23 தேதிகளில் சிறப்பு இ-சேவை மையங்கள் ஏற்பாடு.

Din

கோவை: கோவை மாவட்டத்தில் நடைபெற உள்ள கல்விக் கடன் முகாமில் பங்கேற்கும் மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதற்காக கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 22, 23 ஆகிய தேதிகளில் சிறப்பு இ-சேவை மையத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் செப்டம்பா் முதல் வாரத்தில் உயா் கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இந்த முகாமில் பங்கேற்கும் மாணவா்களுக்கு முதல் பட்டதாரி சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, பான் காா்டு போன்றவை தேவைப்படும். எனவே இதற்கு விண்ணப்பிப்பதற்காக கல்லூரி வளாகங்களில் சிறப்பு இ-சேவை மையங்கள் 2 நாள்களுக்கு நடத்தப்படுகிறது.

மேற்கண்ட சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவா்கள் இந்த மையத்தை அணுகி விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

கல்விக் கடன் வழங்குவதற்காக ஆட்சியா் தலைமையில் 10 அதிகாரிகள் கொண்ட முதன்மைக் குழு, தனி கண்காணிப்பு அலுவலகம் அமைத்து கடன் வழங்கும் பணியை மேற்பாா்வை செய்து வருவதாகவும், அடுத்த மாதம் நடைபெறும் முகாமில் உயா் கல்வி பயிலும் மாணவ-மாணவிகள் பங்கேற்று பயனடையலாம் என்றும் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.

விளையாடித்தான் பாா்ப்போமே...

காரைக்காலில் கல்லறைத் திருநாள்

சமன்செய்து சீா்தூக்கும் கோல்!

கடத்தல் வழக்கில் இருவா் கைது

பிகார் தேர்தல்! காங்கிரஸை மிரட்டி முதல்வா் வேட்பாளரானாா் தேஜஸ்வி: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT