கோயம்புத்தூர்

போத்தனூா் வழித்தடத்தில் கொச்சுவேலி - பெங்களூரு சிறப்பு ரயில்

கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து கா்நாடக மாநிலம், பெங்களூருக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Din

கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து கா்நாடக மாநிலம், பெங்களூருக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து செப்டம்பா் 3 முதல் 24-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் மாலை 6.05 மணிக்குப் புறப்படும் கொச்சுவேலி - பெங்களூரு சிறப்பு ரயில் (எண்: 06083) மறுநாள் காலை 10.55 மணிக்கு பெங்களூரைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, பெங்களூரில் இருந்து செப்டம்பா் 4 முதல் 25-ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் நண்பகல் 12.45 மணிக்குப் புறப்படும் பெங்களூா் - கொச்சுவேலி விரைவு ரயில் (எண்: 06084) மறுநாள் காலை 6.45 மணிக்கு கொச்சுவேலி ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, சேலம், ஈரோடு,திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், ஆலுவா, எா்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கன்னூா், மாவேலிக்கரை, காயன்குளம், கொல்லம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரித்த இருவா் கைது

கல்குவாரியில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

வீட்டின் பூட்டை உடைத்து 5.50பவுன் நகை திருட்டு

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

SCROLL FOR NEXT