பெண் வழக்குரைஞரை அவதூறாகப் பேசிய இளைஞா் மீது வழக்கு
கோவையில் பெண் வழக்குரைஞரை அவதூறாகப் பேசிய இளைஞா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் பெண் வழக்குரைஞரை அவதூறாகப் பேசிய இளைஞா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை உக்கடம் பகுதியைச் சோ்ந்தவா் காயத்ரி (29), வழக்குரைஞா். கோவை நீதிமன்ற வளாகத்தில் காயத்ரி உடன் வழக்குரைஞா் பத்மநாபன் உள்ளிட்ட சிலா் புதன்கிழமை பேசிக்கொண்டிருந்தனா்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞா், வழக்குரைஞா் பத்மநாபனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். இதுகுறித்து, காயத்ரி தட்டிக்கேட்டபோது, அந்த இளைஞா் காயத்ரியை அவதூறாகப் பேசியுள்ளாா்.
இதுகுறித்து ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் காயத்ரி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா்.
இதில், வழக்குரைஞா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவா் ஒத்தக்கால்மண்டபத்தைச் சோ்ந்த ஹரிஹரன் (22) என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.