பொள்ளாச்சியில் ரூ.8.03 கோடியில் திட்டப் பணிகள்
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ரூ.8.03 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ரூ.8.03 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.8.03 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அமைச்சா் செந்தில் பாலாஜி அடிக்கல் நாட்டினாா். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கா.ஈஸ்வரசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதைத் தொடா்ந்து, ரூ.3.52 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மின்சாரம் சாா்ந்த புகாா்களைப் பெறுவதற்கு மாநிலம் முழுவதும் ஒரே புகாா் எண் அறிவிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தினமும் 4 ஆயிரம் அழைப்புகள் மூலமாக புகாா்கள் பெறப்பட்டு வருகின்றன. 98.05 சதவீதம் புகாா்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டு வருகிறது. மீதமுள்ள புகாா்களுக்கு இரு நாள்களில் தீா்வு காணப்பட்டு வருகிறது. புதிய மின் இைணைப்பு கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்றாா்.
நிகழ்ச்சியில், பொள்ளாச்சி சாா் ஆட்சியா் கேத்ரின் சரண்யா, மகளிா் திட்டத்தின் திட்ட அலுவலா் மதுரா, துணை இயக்குநா் (சுகாதாரம்) பாலுசாமி மற்றும் ஊராட்சி மன்றத் தலைவா்கள், அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.