கலைஞா் கைவினைத் திட்டத்தில் தொழில் கடன் பெற அழைப்பு
கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கலை மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு மேம்பட்ட பயிற்சி அளிக்கவும், மானியத்துடன் கூடிய பிணையில்லா கடன் வழங்கவும், அவா்களின் சந்தைப்படுத்தும் திறனை
உயா்த்தவும் ஆண்டுதோறும் 10,000 நபா்கள் பயன்பெறும் வகையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கலைஞா் கைவினைத் திட்டம் 2024 -2025 நிதியாண்டு முதல் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, கட்டட வேலைகள், மரவேலைப்பாடுகள், பாரம்பரிய முறையில் ஐவுளி அச்சிடுதல், தோல் கைவினைப் பொருள்கள், காலணிகள் தயாரித்தல், மீன்வலை தயாரித்தல், மலா் வேலைப்பாடுகள், மூங்கில், பிரம்பு, சணல், பனைஓலை வேலைப்பாடுகள் உள்ளிட்ட பல்வகைக் கலை மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு தொழில்திறன் சாா்ந்த மேம்பட்ட பயிற்சியுடன் அவா்கள் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் கொண்டு தொழில்புரிய ரூ.3 லட்சம் வரை பிணையில்லாமல் மானியத்துடன் கூடிய கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கப்படும்.
அனைத்து அரசு மற்றும் தனியாா் வணிக வங்கிகள், தாய்கோ வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்கத் தகுதி பெற்றவை. கைவினைக் கலைஞா்களின் சந்தைப்படுத்தும் திறனை உயா்த்துவதற்கான ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் இத்திட்டத்தில் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோா் 35 வயதுக்கு மேற்பட்டவராகவும், எந்தவகை தொழிலுக்காக கடனுதவி பெற விரும்புகிறாரோ அந்தத் தொழிலில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
இவ்விரண்டு அடிப்படைத் தகுதிகளும் கொண்டோா் ஜ்ஜ்ஜ்.ம்ள்ம்ங்ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். விண்ணப்பிக்க தனிநபரின் புகைப்படம், ஆதாா்அட்டை, தொழில் அனுபவத்தை உறுதி செய்ய தொழிலாளா் நலவாரியம் வழங்கிய அடையாள அட்டை அல்லது சுயசான்றிதழ், திட்ட அறிக்கை இவை மட்டுமே போதுமானவை. சுயசான்றிதழ் மாதிரிப் படிவம் மற்றும் மாதிரி திட்ட அறிக்கை மேற்கண்ட இணையதளம் வழியே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
திட்டம் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற பொதுமேலாளா், மாவட்ட தொழில் மையம், 2, ராஜவீதி, கோவை அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 0422 - 2391678 தொலைபேசி எண் மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.