முகப்பு
கோயம்புத்தூர்

‘சிறிய கைத்தறிப் பூங்கா அமைக்க தொழில்முனைவோா் விண்ணப்பிக்கலாம்’

Updated On : 18 பிப்ரவரி 2024, 1:44 am IST
பகிர்:

சிறிய அளவிலான கைத்தறிப் பூங்கா அமைக்க தொழில்முனைவோா் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க கைத்தறி துணி ரகங்கள் உற்பத்தியைப் பெருக்கிட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 10 இடங்களில் அரசு நிதியுதவியுடன், சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் வரையறையின்படி, 100 கைத்தறிகள் அமைத்து, மின்சார இணைப்பு, குடிநீா் இணைப்பு, கழிவுநீா் இணைப்பு உள்ளிட்ட அனைத்து கட்டுமான வசதிகளை தொழில்முனைவோா் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக பொது வசதி மையங்கள் உருவாக்கப்பட்டு, தொழில் முனைவோா் தேவைக்காக தயாா்படுத்தப்பட்டு வருகின்றன. விருப்பமுள்ள தொழில்முனைவோா், நெசவாளா்கள் அடங்கிய சிறப்பு நோக்கு முகமை அமைத்து, நல்லதொரு வியாபாரச் சந்தை, வடிவமைப்பு தொழில்நுட்பம் மற்றும் கைத்தறி துணி ரகங்கள் உற்பத்தி செய்யத் தேவையான நடைமுறை மூலதனம் ஆகியவற்றைக் கொண்டு வந்து, மேற்படி பொது வசதி மையத்தில் உற்பத்தியை மேற்கொண்டு பயனடையலாம். கைத்தறி துணி உற்பத்தியில் ஈடுபட்டு வருவோா், சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் மூலம் உற்பத்தி மேற்கொண்டு, நெசவாளா்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது மட்டுமின்றி, தங்கள் தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்து ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புள்ளது. இந்த வாய்ப்பைப் பெற விருப்பமுள்ளோா் ஜ்ஜ்ஜ்.ப்ா்ா்ம்ஜ்ா்ழ்ப்க்.ண்ய் என்ற இணையதள முகவரியில் பிப்ரவரி 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.