முகப்பு
கோயம்புத்தூர்

பி.ஏ.சா்வதேசப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம்

Updated On : 1 மார்ச், 2024 at 5:20 AM
பகிர்:

கோவை பி.ஏ. சா்வதேசப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. ராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்டதை நினைவு கூரும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 300க்கும் மேற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. பள்ளியின் தலைவா் அப்புக்குட்டி கண்காட்சியைத் தொடங்கிவைத்தாா். துணைத்தலைவா் லட்சுமி அப்புக்குட்டி முன்னிலை வகித்தாா். இந்நிகழ்வில், மாணவா்கள் தங்களின் பல்வேறு படைப்புகளைக் காட்சிக்கு வைத்திருந்தனா். கல்லூரி நிா்வாக அதிகாரி மணிகண்டன், பள்ளி முதல்வா் மகேஷ் கே.நாராயணன் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.