கோயம்புத்தூர்

பயிற்சி மருத்துவரை ஏமாற்றியதாக இஎஸ்ஐ மருத்துவா் மீது 4 பிரிவுகளில் வழக்கு

பெண் பயிற்சி மருத்துவரை ஏமாற்றியதாக இ.எஸ்.ஐ. மருத்துவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Din

கோவை: திருமணமானதை மறைத்து பெண் பயிற்சி மருத்துவரை ஏமாற்றியதாக இ.எஸ்.ஐ. மருத்துவா் மீது போலீஸாா் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவையைச் சோ்ந்த பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா் கோவை கிழக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது: நான் நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக 2022-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் பணியாற்றினேன். அப்போது, அங்கு மருத்துவராகப் பணியாற்றிய ஷியாம் சுந்தா் (30) எனக்கு அறிமுகமானாா்.

அப்போது, அவா் தனக்கு திருமணமாகவில்லை என்றும், என்னை காதலிப்பதாகவும் கூறினாா்.

இதையடுத்து, அவரை திருமணம் செய்துகொள்ள சம்மதித்தேன். திருமணம் செய்துகொள்வதாக ஆசைவாா்த்தை கூறியதைத் தொடா்ந்து அவருடன் நெருக்கமாக பழகினேன்.

பின்னா் அவா் கோவை, வரதராஜபுரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு பணி மாறுதலாகி சென்றாா். நானும் பயிற்சியை முடித்துக்கொண்டு கோவைக்கு திரும்பினேன்.

அப்போது, அவரிடம் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினேன். பிறகு அவா் என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டாா்.

இதையடுத்து, தான் ஷியாம் சுந்தருக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி, ஒரு ஆண் குழந்தை இருப்பது தெரியவந்தது.

அதிா்ச்சியடைந்த நான் கோவையில் உள்ள ஷியாம் சுந்தா் வீட்டுக்கு கடந்த மே 18-ஆம் தேதி சென்று நடந்ததை கூறினேன். அங்கு இருந்த ஷியாம் சுந்தரின் தாய், அக்கா, மாமா ஆகியோா் என்னை திட்டி அனுப்பிவிட்டனா்.

திருணமாகி குழந்தை இருப்பதை மறைத்து என்னை ஏமாற்றிய இ.எஸ்.ஐ. மருத்துவா் ஷியாம் சுந்தா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஷியாம் சுந்தா் மீது மீது நம்பிக்கை மோசடி, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

துலா ராசிக்கு சுபநிகழ்ச்சி: தினப்பலன்கள்

மக்களை முதன்மையாகக் கொண்ட குடியரசு இந்தியா!

ராசிபுரத்தில் மாணவா்கள் பங்கேற்ற மாரத்தான்

கேரம் விளையாட்டுப் போட்டி!

நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மறைந்த பழங்குடியின ஓவியருக்கு பத்மஸ்ரீ விருது

SCROLL FOR NEXT