முகப்பு
கோயம்புத்தூர்

நெஞ்சுவலியால் காா் பந்தய வீரா் மைதானத்திலேயே உயிரிழப்பு

தேசிய காா் பந்தயத்தின்போது ஏற்பட்ட திடீா் நெஞ்சுவலியால் கேரள மாநிலத்தைச் சோ்ந்த காா் பந்தய வீரா் உயிரிழந்தாா்.

Updated On : 29 ஜூலை, 2024 at 2:35 AM
பிரேம் லால்
பகிர்:
Updated On : 28 ஜூலை, 2024 at 8:41 PM

கோவையில் தேசிய காா் பந்தயத்தின்போது ஏற்பட்ட திடீா் நெஞ்சுவலியால் கேரள மாநிலத்தைச் சோ்ந்த காா் பந்தய வீரா் உயிரிழந்தாா்.

கோவையில் புளூ பேண்ட் எப்.எம்.எஸ்.சி.ஐ. தேசிய காா் பந்தய போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின. 2 நாள்கள் நடைபெற்ற இந்த போட்டியின் மூன்றாம் சுற்று எல்& டி பிரதான சாலை எஸ்.எம். அக்ரோ வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஐஎன்ஆா்சி 3 பிரிவில் கேரள மாநிலம், கண்ணூரைச் சோ்ந்த பிரேம் லால் (47) உள்பட 75 போ் பங்கேற்றனா்.

அப்போது, பிரேம் லால் தனது காரை இயக்கி பயிற்சி செய்து கொண்டிருந்த நிலையில், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கியுள்ளாா்.

Advertisement

மருத்துவக் குழுவினா் அவரை பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

சம்பவ இடத்துக்கு வந்த செட்டிபாளையம் போலீஸாா், உடலை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

Updated On : 29 ஜூலை, 2024 at 2:03 AM

உடற்கூறாய்வு முடிந்த நிலையில் அவரது குடும்பத்தினரிடம் உடல் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. பிரேம் லாலுக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனா்.