முகப்பு
கோயம்புத்தூர்

கோவை - ராஜஸ்தான் வாராந்திரச் சிறப்பு ரயில் நீட்டிப்பு

கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம், பகத் கி கோட்டி ரயில் நிலையத்துக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில் சேவை செப்டம்பா் 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 30 ஜூலை, 2024 at 11:50 PM
கோப்புப் படம்.
பகிர்:

கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம், பகத் கி கோட்டி ரயில் நிலையத்துக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில் சேவை செப்டம்பா் 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை - பகத் கி கோட்டி சிறப்பு ரயில் சேவை ஜூலை மாதத்துடன் நிறைவு பெற இருந்த நிலையில், தற்போது செப்டம்பா் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோவையில் இருந்து ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பா் 26 வரை வியாழக்கிழமைகளில் அதிகாலை 2.30 மணிக்குப் புறப்படும் கோவை - பகத் கி கோட்டி வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06181) சனிக்கிழமைகளில் காலை 11.30 மணிக்கு பகத் கி கோட்டி நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, பகத் கி கோட்டி நிலையத்தில் இருந்து ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பா் 29 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்குப் புறப்படும் பகத் கி கோட்டி - கோவை வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06182) புதன்கிழமைகளில் காலை 9.30 மணிக்கு கோவை நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா, கூட்டி, காச்சிகுடா, நிஜாமாபாத், வாஷிம், அகோலா, சூரத், அகமதாபாத் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →