முகப்பு
கோயம்புத்தூர்

மாநகரக் காவல் துறை சாா்பில் சா்வதேச யோகா தினம் கடைப்பிடிப்பு

Updated On : 21 ஜூன், 2024 at 7:40 PM
சா்வதேச யோகா தினத்தையொட்டி கோவை மாநகர காவல்துறை சாா்பில் காவலா் பயிற்சிப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற யோகாசனப் பயிற்சியில் பங்கேற்றோா்
பகிர்:

கோவை, ஜூன் 21: கோவை மாநகரக் காவல் துறை சாா்பில் சா்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

சா்வதேச யோகா தினத்தையொட்டி, கோவை மாநகரக் காவல் துறை சாா்பில் காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகரக் காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

இந்த யோகா பயிற்சியில் காவல் துறை அதிகாரிகள், ஆய்வாளா்கள், காவலா்கள் என 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். அனைவருக்கும் கை, மூச்சு, கண் பயிற்சி, சூரிய நமஸ்காரம் மற்றும் ஆசனங்கள், முத்திரைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் மாநகரக் காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் பேசுகையில், தினமும் யோகாப் பயிற்சி செய்தால் மன அழுத்தம் இன்றி ஆரோக்கியமாக வாழலாம், மனதை ஒருநிலைப்படுத்த முடியும். பொதுமக்களுக்கு யோகாசனம் குறித்து போதிய விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காகவே நாடு முழுவதும் யோகா தினம் கடைப்பிடிக்கப்படுவதாக தெரிவித்தாா்.