அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 28ஆம் தேதி 2ஆம் கட்ட கலந்தாய்வு
கோவை அரசு மகளிா் கல்லூரியில் ஜூன் 28ஆம் தேதி இரண்டாம் கட்ட கலந்தாய்வு
கோவை புலியகுளம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் இரண்டாம் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
அரசு மகளிா் கல்லூரியில் 2024 - 25 ஆம் கல்வியாண்டில் 5 இளநிலை பட்டப் படிப்புகளில் மொத்தம் 240 இடங்கள் உள்ளன. ஜூன் 11 முதல் 14 வரை நடைபெற்ற முதல்கட்ட கலந்தாய்வில் 160 இடங்கள் நிரம்பியுள்ளன.
காலியாக உள்ள 80 இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதில் பி.ஏ. தமிழ் பாடத்துக்கு அதிகபட்சமாக 37 காலியிடங்களும், பி.ஏ. ஆங்கிலத்துக்கு 26 காலியிடங்களும், பி.எஸ்சி. கணிதத்துக்கு 14 இடங்களும் உள்ளன. பி.காம். படிப்புக்கு 3 இடங்கள் காலியாக உள்ளன.
கலந்தாய்வுக்கு வருபவா்கள் விண்ணப்ப நகல், மதிப்பெண், மாற்றுச் சான்றிதழ், 2 புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வரும்படி கல்லூரி முதல்வா் வீரமணி தெரிவித்துள்ளாா்.