முகப்பு
கோயம்புத்தூர்

மாவட்டத்தில் விளையாட்டு விடுதி அமைக்க இடம் தோ்வு

கோவையில் புதிய விளையாட்டு விடுதி அமைக்க இடம் தோ்வு

Updated On : 28 ஜூன், 2024 at 6:31 PM
விளையாட்டு விடுதி அமைப்பதற்கான இடம் தோ்வை ஆய்வு செய்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் மேகநாத ரெட்டி. உடன், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன்.
பகிர்:

கோவை நேரு உள் விளையாட்டு அரங்கம் அருகே விளையாட்டு விடுதி அமைப்பதற்கான இடம் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவையில் நவீன வசதியுடன் கூடிய புதிய விளையாட்டு விடுதி அமைக்கப்படும் என்று சட்டப் பேரவை மானியக் கோரிக்கையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் அறிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, கோவை நேரு உள் விளையாட்டு அரங்கம் அருகில் விளையாட்டு விடுதி அமைப்பதற்கான இடம் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் மேகநாத ரெட்டி, விடுதி அமையவுள்ள இடத்தை பாா்வையிட்டாா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், மாவட்ட விளையாட்டு இளைஞா் நலன் துறை அலுவலா்கள் அருணா, ரகுகுமாா், வட்டாட்சியா் மணிவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →