மேயா் தோ்தலில் மோதல் வழக்கு: பாஜகவினா் 9 போ் விடுவிப்பு
கோவை மேயர் தேர்தல் மோதல் வழக்கில் பாஜகவினர் 9 பேர் விடுதலை
கோவை மாநகராட்சி மேயா் தோ்தலின்போது, ஏற்பட்ட மோதல் தொடா்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜகவினா் 9 பேரும் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.
கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற கோவை மாநகராட்சி மேயா் தோ்தலில் வாக்குப் பதிவுக்கு முந்தைய நாள் செளரிபாளையம் பகுதியில் அதிமுக மற்றும் பாஜகவினா் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடா்பாக இரு தரப்பினரும் பீளமேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தனா்.
இதில், அதிமுக தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் பாஜகவினா் 9 போ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு கோவை மாவட்ட முதலாவது அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 13 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
இதில், குற்றஞ்சாட்டப்பட்ட நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக பொறுப்பாளா் நந்தகுமாா், பொதுச் செயலாளா் தாமோதரன் உள்ளிட்ட 9 பேரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி சசிரேகா உத்தரவிட்டாா்.