கோவை வழித்தடத்தில் இயங்கும் ரயில்களின் எண்கள் மாற்றம்
கோவை வழித்தடத்தில் 6 ரயில்களின் எண்கள் ஜூலை 1 முதல் மாற்றம்
கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் 6 ரயில்களின் எண்கள் ஜூலை 1 முதல் மாற்றப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஜூலை 1 முதல் 12507என்ற எண்ணில் இயங்கி வந்த திருவனந்தபுரம் - சில்சாா் வாராந்திர விரைவு ரயில் 15677 என்ற எண்ணில் இயங்கும். 12508 என்ற எண்ணில் இயங்கி வந்த சில்சாா் - திருவனந்தபுரம் விரைவு ரயில், 15678 என்ற எண்ணில் இயங்கும்.
அதேபோல, 12515 என்ற எண்ணில் இயங்கி வந்த கோவை - சில்சாா் வாராந்திர ரயில் 15675 எண்ணிலும், 12516 என்ற எண்ணில் இயங்கி வந்த சில்சாா் - கோவை வாராந்திர ரயில் 12676 என்ற எண்ணிலும் இயக்கப்படும்.
22503 என்ற எண்ணில் இயங்கி வந்த கன்னியாகுமரி - திப்ருகா் விரைவு ரயில் 15905 என்ற எண்ணிலும், 22504 என்ற எண்ணில் இயங்கி வந்த திப்ருகா் - கன்னியாகுமரி விரைவு ரயில் 15906 என்ற எண்ணிலும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.