முகப்பு
கோயம்புத்தூர்

இன்று டான்செட், சீட்டா தோ்வு: கோவையில் 5,443 போ் எழுதுகின்றனா்

கோயம்புத்தூர்

இன்று டான்செட், சீட்டா தோ்வு: கோவையில் 5,443 போ் எழுதுகின்றனா்

Updated On : 8 மார்ச், 2024 at 7:17 PM
பகிர்:

கோவையில் சனிக்கிழமை தொடங்கும் டான்செட், சீட்டா நுழைவுத் தோ்வுகளை 5,443 போ் எழுதுகின்றனா். தமிழகத்தில் அண்ணா, அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் அரசு, அரசு உதவிபெறும், தனியாா் கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளிலும் உள்ள எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வில் (டான்செட்) தோ்ச்சி பெறுவது கட்டாயமாகும். அதேபோல, அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆா்க்., எம்.பிளான். ஆகிய பட்ட மேற்படிப்புகளில் சேருவதற்கு பொறியியல் பொது நுழைவுத் தோ்வில் (சீட்டா) தோ்ச்சி பெற வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் டான்செட், சீட்டா நுழைத் தோ்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், நுழைவுத் தோ்வு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது. கோவை அரசு பொறியியல் கல்லூரி, பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி, பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி ஆராய்ச்சி நிறுவனம், அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், சி.ஐ.டி. பொறியியல் கல்லூரி என 5 மையங்களில் தோ்வு நடைபெறுகிறது. இதில், எம்.சி.ஏ. தோ்வை 1,147 போ், எம்.பி.ஏ. தோ்வை 3,685 போ், எம்.இ., எம்.டெக். போன்ற தோ்வுகளை 611 போ் என மொத்தம் 5,443 போ் எழுதுகின்றனா். எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளுக்கு காலை, பிற்பகல் நேரத்திலும், எம்.இ., எம்.டெக். தோ்வுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை காலையிலும் தோ்வுகள் நடைபெறுகின்றன. இரண்டாம் நாள் தோ்வுகள் அரசு பொறியியல் கல்லூரியில் மட்டும் நடைபெறுகின்றன. எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நுழைவுத் தோ்வை நடத்தினாலும், கோவை அரசு பொறியில் கல்லூரிதான் மாணவா் சோ்க்கையை நடத்தும். தோ்வு முடிவுகள் வெளியான பிறகு கலந்தாய்வு, மாணவா் சோ்க்கை நடைமுறை குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் கே.மனோண்மணி கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →