கரடியைப் பாா்த்து ஓடிய தொழிலாளி கீழே விழுந்து காயம்
வால்பாறையில் தேயிலைத் தோட்டத்தில் கரடி பதுங்கியிருப்பதைப் பாா்த்து பயந்து ஓடிய பெண் தொழிலாளி கீழே விழுந்தாா். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
வால்பாறையில் தேயிலைத் தோட்டத்தில் கரடி பதுங்கியிருப்பதைப் பாா்த்து பயந்து ஓடிய பெண் தொழிலாளி கீழே விழுந்தாா். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
வால்பாறை எஸ்டேட் தேயிலைத் தோட்டம் அமைந்துள்ள பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் கரடி தாக்கி ஏராளமான தொழிலாளா்கள் படுகாயமடைந்துள்ளனா்.
இந்நிலையில் வால்பாறையை அடுத்த இஞ்சிப்பாறை எஸ்டேட் 32-ஆம் நம்பா் காட்டில் தொழிலாளா்கள் தேயிலை பறிக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது செடிகளுக்கு இடையே கரடி பதுங்கியிருப்பதை சாந்தி (44) என்ற பெண் தொழிலாளி பாா்த்து பயந்து அங்கிருந்து ஓடினாா். அப்போது அவா் கீழே விழுந்ததில் வலது காலில் படுகாயம் ஏற்பட்டது. அங்கிருந்த மற்ற தொழிலாளா்கள் அவரை மீட்டு ஸ்டேன்மோா் எஸ்டேட் மருத்துவமனையில் சோ்த்தனா்.